பிறந்த நாள் !!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நேற்று  தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு விக்னேஷ் சிவன் உள்பட மொத்த திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதது.

இந்த நிலையில் நேற்று மாலை நயன்தாரா தனது பிறந்த நாளை கொண்டாடினார்.  அவருக்கு மலையாளபடம் ஒன்றின் படப்பிடிப்பு என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்பதும் பிறந்தநாளை படக்குழுவினரும் மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட அறையில், சுற்றிலும் பலூன்கள் இருக்க, பிறந்த நாள் கேக்கை வெட்டி நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில் இந்த பிறந்தநாள் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த விக்னேஷ் சிவன் இதுகுறித்து கூறியதாவது:
அன்பான அம்மா, அப்பா மற்றும் சகோதரர் ஆகியவர்களை இந்த பிறந்த நாளில் அவர் மிஸ் செய்தபோதிலும் எவ்வளவு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அதுதான் ஆச்சரியம்’ என்று ஸ்வீட்டாக கமெண்ட் செய்துள்ளார்.