பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்த கொள்கலன்களால் கடும் ஆத்திரமடைந்த இலங்கை அரசின் அதிரடி நடவடிக்கை!

பிரித்தானியாவில் இருந்து இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் அடங்கிய கண்டேனர்களை திருப்பி அனுப்புமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை இலங்கை சுங்க திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் பயன்படுத்திய மெட்ரஸ் என தெரிவித்து பயன்படுத்த முடியாத மெட்ரஸ், காபட் போன்றவையே குறித்த குப்பை கண்டேனர்களின் மூலம் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள குறித்த கண்டேனர்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை பரிசோதனை செய்த பின்னரே இவ்வாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

சுமார் 100 கண்டேனர்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதனால் பாரிய அளவில் சுற்றாடல் மாசு ஏற்படலாம் என அவற்றை திருப்பி அனுப்புமாறும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அத்துடன் அனுப்பப்பட்ட கொள்கலன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.