பிரமுகர்கள்; இன்றி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

வடமாகாணசபையின் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்களது பிரசன்னமின்றி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

எனினும் வடமாகாணசபையின் முதலமைச்சர் இணைத்தலைமையில் கூட்டம் கூடிய போதும பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்களது பிரசன்னமின்றி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிக்க குவிந்துள்ள தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் அதனை அனுமதித்துள்ள கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகளது போக்கு என்பவை தொடர்பில் கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY