பிரபுதேவா-நயன்தாரா திடீர் சந்திப்பு? கோலிவுட்டில் பரபரப்பு

i3-phpபிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையே நட்பு மலர்ந்தது.

பிறகு அதுவே காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

பிரபுதேவாவை மணக்க ஏதுவாக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியதுடன் நடிப்புக்கும் முழுக்குபோட முடிவு செய்தார் நயன்தாரா. ஆனால் திடீரென்று இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது.

உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து இருவருக்குமான காதல் முறிந்தது. இருவரும் வெவ்வேறு திசையில் பயணிக்க தொடங்கினர்.

பிரபுதேவா தென்னிய படங்களை மறந்து இந்தி படங்களில் கவனத்தை செலுத்தினார்.

நயன்தாரா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். காலப்போக்கில் இருவரும் தங்கள் துறையில் பிஸியானார்கள்.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கத்தையடுத்து காதலர்களாக மாறினர். இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு திரையுலகில் மவுசு குறைந்தபாடில்லை. சக நடிகைகளை காட்டிலும் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் முன்னணி இடத்திலும் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார்.

எனவே திருமணம் மற்றும் காதல் விவகாரங்கள் குறித்தான எந்த வதந்திக்கும் பதில் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.

சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரபுதேவா, நயன்தாரா இருவரும் தற்செயலாக சந்தித்ததாகவும், அப்போது இருவரும் மனம்விட்டு சில விஷயங்களை பகிர்ந்துகொண்டதாகவும் கோலிவுட்டில் வேகமாக கிசுகிசு பரவி வருகிறது. ஆனால் இதை இருதரப்பிலும் யாரும் உறுதி செய்யவில்லை.

வாட்ஸ் அப், இணைய தளங்களில் அவ்வப்போது பரவும் வதந்திபோன்று இதுவும் ஒரு வதந்திதான் என சிலர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY