பிரபாகரனை மஹிந்த சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம் கேள்வி

2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்தமையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கொடிய பயங்கரவாதியாக இருந்தால் ஏன் 2005ம் ஆண்டு நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்பினீர்கள்.

அத்தோடு இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனை பாராட்டுகிறார்கள் எனவும் நான் கேட்க விரும்புகிறேன்” என கேள்வியெழுப்பினார்.