பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிவிப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இன்று (03) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென, ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோருக்கான விசேட மாநாடு, இன்று நடைபெறும். இந்த மாநாட்டில் வைத்தே, விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளாரென, அறிய முடிகின்றது.

இந்த மாநாடு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் உள்ள சகல மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்காகப் போட்டிடும் வேட்பாளர்களில், ஆகக்கூடுதலான எண்ணிக்கையான வேட்பாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பொன்றை, 3 ஆம் திகதியன்று தான் விடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி​ மைத்திரிபால சிறிசேன, திங்கட்கிழமை (01) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY