பிரதமர் ரணில் போர்வை போர்த்திய இனவாதி – வரதராஜப்பெருமாள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க போர்வை போர்த்திய இனவாதியென இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒரே மாதிரியானவர்களே என தெரிவித்துள்ளார்.

ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ நேரடியான இனவாதி என்றும் அதேவேளை ரணில் விக்ரமசிங்க போர்வை போர்த்திய இனவாதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போது எமக்கு இருக்கின்ற மாகாண சபையை தவறவிட்டால் எமக்கான அதிகாரம் என எதுவுமே காணப்படாதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.