பிரதமர் யாழுக்கு விஜயம்

வடக்குக்கு 3 நாள் விஐயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

3 நாட்கள் வடக்கில் தங்கியிருக்கும் பிரதமர் தலைமையிலான குழுவினர் இன்று (14) யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் முதலாவது நிகழ்வாக கோப்பாய் பிரதேச புதிய கட்டிடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.