பிரதமர் தலைமையிலான கலந்துரையாடலில் எமது பாராளுமன்ற குழு கலந்துக்கொள்ளாது

எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது பாராளுமன்ற குழு கலந்துக்கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைத் தொடர்பில் கலந்துரையாட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து உறுப்பினர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார்.

இந்த நிலையில் அவ்வாறான கலந்துரையாடலை நடத்துவதில் நன்மையில்லை என்பதால் அந்த அழைப்பை நிராகரித்து கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள போவதில்லை என காணொளி ஒன்றை வெளியிட்டு அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.