பிரதமரை பாதுகாக்க சுமந்திரன் தீவிர முயற்சி – அருந்தவபாலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழர்களது பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஒருபோதும் அக்கரையுடன் செயற்பட மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இலங்கையை சர்வதேச குற்றவியில் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல இயலாது என்று கூறியிருந்த சுமந்திரன், கூட்டத் தொடர் முடிந்த பின்னர் சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெறாமல், எதிர்தரப்பில் யாரும் வெற்றி பெற்றால், அவர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கையாக இருக்கவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் சாடியள்ளார்.