பிரதமரை சந்தித்த பாகிஸ்தான் விமானப்படை தளபதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்சல் முஜாஹித் அன்வர் கானுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டதொகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக விமானபடை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் விமானபடை தளபதிக்கும் இலங்கை விமானப்படை தளபதி ஏயார் மார்சல் சுமங்கல டயஸ்க்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பாகிஸ்தான் விமானப்படை தளபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த புதன்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளனர்.