பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தவைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது அரசியலமைப்பு சபைக்கான பிரதிநிதிகள் நியமனம் அவதானம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியலமைப்பு சபையின் அங்கம் வகித்திருந்த 10 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்களது பதவி காலம் நிறைவடைந்துள்ளது.

அந்தவகையில் அதற்கான ஒரு உறுப்பினர் ஆளும் கட்சியிலோ அல்லது எதிர்க்கட்சியிலோ அங்கம் வகிக்காத நாடாளுமன்ற உறுப்புரிமைக் கொண்ட கட்சியினால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

மேலும் ஏனைய ஐவரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணைந்து பரிந்துரைக்க வேண்டும்.

இந்நிலையிலேயே ரணிலுக்கும் சம்மந்தனுக்கும் இடையில் இவ்விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.