பிரதமரின் செயற்பாடு கவலையளிக்கின்றது – மனோ ஆதங்கம்!

புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்புகளையும் மீறி 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தற்போது பாரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பாக இன்று(புதன்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பினர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அலரிமாளிகைக்குச் சென்று முன்னெடுத்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடன் இருந்தமை கவலையளிக்கின்றது.

எனவே இதுதொடர்பாக நாம் அவரை சந்தித்து பேச தீர்மானித்துள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.