பிரதமரின் இந்திய விஜயத்தின் இறுதிநாள் இன்று

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் இறுதிநாள் இன்றாகும்.

இந்நிலையில் நேற்று (09) பௌத்த தேரர்களின் ஆசிர்வாதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் நேற்று அவர் காசி விஸ்வநாதன் கோவிலிலும் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.

இதேவேளை ´த ஹிந்து´ பத்திரிகையில் நேர்காணலில் ஈடுபட்ட அவர், நாட்டின் தேசிய வளங்களை சர்வதேச கட்டுப்பாட்டிற்கு வழங்வதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் உறுதியான கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.