பிரச்சாரத்தை யாழில் தொடங்கினார் ரணில்!

இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகை தந்துள்ளார்.இந்நிலையில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு சென்ற மக்கள் யாழ் முற்றவெளிக்கு வெளியில் வைத்து இன்று தீவிர சோதனைகளின் பின்னரே உள்ளேஅனுமதிக்கப்பட்டனர்.

கூட்டமைப்பின் புதிய தேர்தல் பிரச்சார ஏற்பாடாக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்பு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் முற்றவெளியில் இன்று நடைபெறுகின்றது.இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் கலந்து கொண்டு மக்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்த பயனாளிகளான மக்கள் அனைவரும் முற்றவெளிக்கு வெளியில் வைத்து ஒவ்வொருவராக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை மேலும் பொதிகள் கைப்பைகள் உள்ளிட்ட எவையினையும் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் நீண்ட தாமத்தின் பின்னரே மக்கள் உள்ளே செல்லமுடிந்தது.