பிரசாரத்திற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை-தமிழிசை சவுந்தரராஜன்

201604111324038149_Prime-Minister-Modi-Tamil-Nadu-visit-next-month-tamilisai_SECVPF.gifதமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிகத்தில் பா.ஜனதா வலுவான கட்சியாக மாறி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது போக மற்ற தொகுதிகளில் பா.ஜனதா வலிமையுடன் போட்டியிடும். பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதா மேலிடத் தலைவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்கள்.

படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு ஏற்க முடியாது. கச்சத்தீவு, சேது சமுத்திர திட்டம் குறித்த தி.மு.க.வின் அறிவிப்பையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தொலை நோக்கு பார்வையுடன் தயாரிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY