பியசேன கமகேக்கு அமைச்சர் பதவி?

நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டதையடுத்து பியசேன கமகே அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். விரைவில் அவருக்கு அமைச்சுப் பதவியொன்றை அரசாங்கம் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தமக்கு இதுவரையில் இது பற்றி அறிவிக்கப்படவில்லை என பியசேன கமகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் தமக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றாலும் அதனை பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY