பிணை முறி மோசடி தொடர்பிலான ஆணைக்குழுவுக்கு பிரதமர் நன்றி

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, தொடர்பில் பிரதமர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதில், பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை தற்போது ஜனாதிபதியால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதி கையளிக்கப்பட்ட, சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவின் அறிக்கையும், பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் ஜனநாயக மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடுகளை இதன்மூலம் மீண்டும் உறுதி செய்ய எம்மால் முடிந்துள்ளது. இனி சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY