பிணை முறி மோசடி – அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

2000 ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை பிணை முறி மோசடி தொடர்பில் தேர்தல் மேடைகளில் கருத்து தெரிவித்து வந்ததாக தெரிவித்தார்.

தற்போது அனைத்து அதிகாரங்களும் இவர்களுக்கு இருக்கின்ற நிலையில் குற்றவாளிகளை கைது செய்வது சிரமமான காரியம் அல்லவென அவர் தெரிவித்தார்.