பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு; புதிய சட்டம் வேண்டும் என்று மைத்திரியிடம் கோரிக்கை!

பிணை­முறி மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வால் குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­குத் தற்­போது காணப்­ப­டும் சட்­டத்­தின் பிர­கா­ரம் தண்­டனை வழங்­கக் குறைந்­தது 10 ஆண்­டு­க­ளா­கும் என்­ப­தால் புதிய சட்­டத்தை உரு­வாக்கி குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தண்­ட­னை­யைப் பெற்­றுக் கொடுக்­கு­மாறு ஜனாதிபதிக்குப் பல கட்­சி­கள் அழுத்­தம் கொடுத்து வரு­கின்­றன என்று அர­ச ­த­ரப்புச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

பிணை­முறி மோச­டி­யால் நாட்­டுக்கு ஏற்­பட்ட இழப்­பீட்டை மீண்­டும் பெற்­றுக்­கொள்­ளும் வகை­யில் சட்­டத்தை மறு­சீ­ர­மைக்­கு­மா­றும் கட்­சி­கள் அரச தலை­வ­ரி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

சாதா­ரண சட்­டத்­தின் பிர­கா­ரம் மாவட்ட நீதி­மன்­றம், மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், உயர்­நீ­தி­மன்­றம் என்ற அடிப்­ப­டை­யில்­தான் வழக்­கின் தீர்ப்பு இறு­தி­யா­கும் சந்­தர்ப்­பம் காணப்­ப­டு­கி­றது. அவ்­வாறு இந்த விட­யம் சென்­றால், தீர்ப்­ பொன்று வழங்­கப்­ப­டு­வ­தற்­குக் குறைந்­தது 10 ஆண்­டு­க­ளா­வது செல்­லும்.

நல்­லாட்­சியை நிலை­நாட்­ட­ வும், மக்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளின் பிர­கா­ர­ மும் ஜனாதிபதி சிறப்­புச் சட்­டங்­களை உரு­வாக்கி மோச­டி­யா­ளர்­க­ளுக்கு தண்­ட­னையை வழங்க நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்­டும் என­வும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்­வைக்­கப் பட்­டுள்­ளது.

LEAVE A REPLY