பாலிவுட் நட்சத்திரங்களின் கவர்ச்சியில் உருவாகியுள்ள தபு ரத்நானி கேலண்டர்!

i3.phpகவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளின் ஒட்டுமொத்த அழகு அணிவகுப்பாக உருவாகியுள்ளது இந்த ஆண்டிற்கான தபு ரத்நானி கேலண்டர். தனது 17 வது வெளியீட்டை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) வெளியிட்டுள்ளது. ஷாரூக்கான் முதல் புதுமுகம் கீர்த்தி சனோன் வரை தங்களது பங்களிப்பைத் தாராளமாக தந்துள்ளனர்.

புகைப்பட கலைஞர் தபு ரத்நானி இந்த வருடமும் ஒவ்வொரு பாலிவுட் நட்சத்திரங்களையும் விதவிதமாக காட்டி ரசிகர்களின் கண்களை குளிரவைத்துள்ளார். அனுஷ்கா சர்மாவின் அழகுத் தோற்றம் அனைவரையும் சுண்டி இழுத்தது என்று சொன்னால், ஆலியா பாட்டின் கழுத்தில் ஷால் போன்ற துணியை மட்டுமே சுத்தி அவர் தரும் கவர்ச்சி படம் கதிகலங்க வைக்கிறது.

தில்வாலே நடிகை கீர்த்தி சனோன் அவருக்கு இது முதல் வருட அனுபவம் அதிலே பாதி ஆடையை கழட்டி அவர் கொடுத்துள்ள போஸ் செம கிளாமர்.

சோனாக்ஷி சின்ஹாவின் காட்டுவாசி கெட்டப் படு சூப்பர்ப். ஹீரோக்களான ஷாரூகின் மழையில் நனையும் காட்சி அட்டகாசம், வருண் தவாணின் ஹோலி ஸ்டைல் புகைப்படமும் அற்புதம்.

மேலும், பர்ணித்தி சோப்ரா, ஸ்ரத்தா கபூர், பர்கான் அக்தர், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரும் தங்களது பங்களிப்பை இந்த கேலண்டர் சூட்டிற்காக அழகாக கொடுத்துள்ளது ரசிகர்களின் கண்களுக்கு நல்ல விருந்தே!

LEAVE A REPLY