பாலஸ்தீனுக்கான நிதியை நிறுத்த போவதாக டொனால்டு டிரம்ப் மிரட்டல்

இஸ்ரேலுடன் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை எனில், பாலஸ்தீனியர்களுக்கான நிதி உதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிம்ரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளாவது:-

எந்த பலனும் இல்லாமல் மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவளித்தது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, நிறைய நாடுகளுக்கும் தான். உதாரணமாக பாலஸ்தீனுக்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதி அளித்தும் ஒரு மரியாதையும் கிடைக்கவில்லை. இஸ்ரேலுடன் நீண்ட காலமாக உள்ள பிரச்சனையை பேசித் தீர்க்கவும் அவர்கள் தயாராக இல்லை.

ஜெருசலேம் விவகாரத்தை எடுத்துக்கொண்டால் பேச்சுவார்த்தையிலேயே மிக கடினமான பகுதி அது. ஆனால், இஸ்ரேல் தனது பங்கினை செலுத்த தயாராக உள்ளது. பாலஸ்தீன் அமைதியான பேச்சுவார்த்தைக்கே விருப்பம் இல்லாமல் இருக்கிறது. நாம் ஏன் அவர்களின் பெரிய எதிர்காலத்திற்கு பணம் செலுத்த வேண்டும்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலேவும், பாலஸ்தீன் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டால் நிதி உதவியை நிறுத்துவோம் என்று தெரிவித்து இருந்தார்.

LEAVE A REPLY