பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்பிய சாந்தனு, …

பார்த்திபன் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்குகிறார். படத்தை அறிவிக்கும் போது, நாயகன், நாயகி என்ற இடங்கள் கோடிடப்பட்டு இருந்தன.
அதாவது நாயகன், நாயகி யார் என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது சாந்தனு இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாகவும், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் கதாநாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பார்த்திபன் இயக்குவதோடு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார்.

LEAVE A REPLY