பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29-ம் தேதி தொடங்குகிறது, பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி ஒன்றாம் தேதி பொது பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

ஜனவரி 29-ம் தேதி பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அன்றையே தினமே பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார் கூறிஉள்ளா. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரையில் நடக்கிறது. பின்னர் மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையில் இரண்டாவது பாதி நடக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவுக்கு வந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் எதிர்ப்பை சந்தித்தது, இதனால் நிறைவேற்றப்படவில்லை.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு ஆனந்த் குமார் பதிலளித்து பேசுகையில், “இவ்விவகாரத்தில் மோடி அரசின் நிலைபாடு மற்றும் கொள்கை மிகவும் தெளிவானது. இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சம உரிமை கிடைக்க வேண்டும். அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும். இம்மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு அளித்த காங்கிரஸ் மாநிலங்களவையில் எதிர்ப்பை தெரிவித்தது. அடுத்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் தலைவர்கள் இஸ்லாமிய பெண்களின் உணர்வை கருத்தில் கொள்ள வேண்டும், மசோதாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY