பாராளுமன்றமும் ரணகளம் தான்! செல்லுகிறார் ஞானசார தேரர்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்லவுள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செல்ல அக்கட்சியின் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

இக் கட்சி மொனராகலை, கொழும்பு, குருநாகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்டு 67,758 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் ஒரு ஆசனம் இக்கட்சிக்கு பெற்றுக்கொண்டுள்ளது.