பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயம்

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியை முழுமைபடுத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்பீரீஸ் தெரிவித்துள்ளார்.

கெடம்பே விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசிப்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

ஜி.எல்.பீரிஸ் நேற்று கெடம்பே விகாராதிபதி கெப்பெட்டியாகொட ஸ்ரீ விமல தேரரை சந்தித்து ஆசிப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.