பாத்ரூமில் திருமணம் செய்த வித்தியாசமான ஜோடி

அமெரிக்காவின் மான்மவுத் நாட்டைச் சேர்ந்த பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் இருவரும் திருமணம் செய்வதற்காக கோர்ட்டிற்கு வந்தனர். திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரைன் தாயிடமிருந்து போன் வந்தது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோர்ட்டில் உள்ள பெண்கள் பாத்ரூமில் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து இருவரும் பாத்ரூமிற்கு சென்று அவருக்கு முதலுதவி செய்தனர். அவர்கள் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்தனர். ஆனால் அதிகாரிகள் அவர்கள் திருமணத்தை பாத்ரூமிலே நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில், அவர்கள் திருமணம் மணமகனின் தாய் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பாத்ரூமில் நடைபெற்றது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப்பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY