பாதுகாப்பு உறவுகள் குறித்து அமெரிக்கா – இலங்கைக்கு இடையே பேச்சு!

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலாய்னா பி.டெப்லிட்ஸ் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோர் இன்று (சனிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின் போதே பாதுகாப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

மேலும் இதன் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பரஸ்பர உறவு தொடர்பான விஷயங்களைக் குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.