பாதாள உலகக்குழு தலைவர்களது பின்னணியில் அரசியல்வாதிகள்: கம்மன்பில

ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் காணப்படுவது போல, அனைத்து பாதாள உலகக்குழு தலைவர்களது பின்னணியிலும் ஒரு அரசியல்வாதி செயற்படுவதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல்வாதிகளின் ஆதரவும், பொலிஸாரின் பாதுகாப்பும் இன்றி உலகில் எந்தவொரு நாட்டிலும் பாதாள உலகக் குழுவொன்று நிலைத்திருக்க முடியாது.

எனவே ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் பெண்கள் காணப்படுவது போல, அனைத்து பாதாள உலகக்குழு தலைவரது பின்னணியிலும் ஒரு அரசியல்வாதி செயற்படுவார்.

எனவே, பாதாள உலகக்குழுவினருக்கு உதவி புரிந்த, ஆதரவளித்தவர்கள் காணப்படின் அவர்கள் கட்சி, அந்தஸ்து பாராது தண்டிக்கப்பட வேண்டும்.

எம்மிடம் அது தொடர்பான தகவல்களை இல்லை. அரசாங்கத்திடமே இவர்கள் தொடர்பான தகவல்கள் காணப்படுகின்றன. எனவே, அவ்வாறானவர்கள் காணப்படின் உடனடியாக அவர்களுக்கு எதிராக நாட்டின் நீதியை பிரயோகிங்கள்” எனத் தெரிவித்தார்.