பாட்டி வேடங்களில் கலக்கும் கோவை சரளா

சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் பாட்டி வேடத்தில் நடித்தவர் கோவை சரளா. பாட்டி சொல்லைத்தட்டாதே படத்தில் மனோரமாவைச்சுற்றி கதை பின்னப்பட்டிருந்ததைப் போன்று இந்த படத்தில் கோவை சரளாவைச் சுற்றித்தான் கதை இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் செம படத்திலும் பாட்டி வேடத்தில் நடித்து வருகிறார் கோவை சரளா.

பலே வெள்ளையத்தேவா படத்தில் எமோசனல் கலந்த காமெடி ரோலில் நடித்தவர், செம படத்தில் அதிரடி காமெடி பாட்டியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து இட்லி என்றொரு படத்திலும் காமெடி பாட்டியாக நடித்திருக்கிறார் கோவை சரளா. இதே படத்தில் அவருடன் இணைந்து சரண்யா, கல்பனா ஆகியோரும் பாட்டி வேடங்களில் நடித்துள்ளனர். கதைப்படி, இந்த மூன்று பாட்டிகளும் செய்யும் காமெடி ரகளைதான் இந்த இட்லி படமாம்.

LEAVE A REPLY