பாடசாலைக் கல்வியை முடித்ததும் 14 மாதங்கள் பால் விற்றேன் – சி.வி.கே.சிவஞானம்!

பாடசாலைக் கல்வியை முடித்ததும் நான் 14 மாதங்கள் பால் விற்றேன் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வடமாகாசபையின் 101ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள வடமாகாணசபை கட்டடத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பால் கொள்வனவு செய்யும்போது அதன் அடர்த்தியினை மானி கொண்டு கணிப்பிட்ட பின்னரே 72 ரூபாவுக்கு கொள்வனவு செய்யவேண்டுமெனத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர், நான் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்ததும் 14 மாதங்கள் பால் விற்றேன். அப்போதே பாலின் அடர்த்தியை கணிப்பிட்டே பாலைக் கொள்வனவு செய்வர்.

பாலின் அடர்த்தியைக் கணிப்பிடவேண்டியது பால் கொள்வனவு செய்பவர்களின் கடமை. பாலுக்குத் தான் கொள்வனவு விலை 72ரூபா, அடர்த்தி குறைந்தால் அது பாலில்லை எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY