பாஜ தலைவர்களுக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னரே தெரியும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பகீர்

daily_news_6238628625870500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்த விஷயம், ஒரு வாரத்துக்கு முன்பே பாஜ தலைவர்களுக்கு தெரிந்துள்ளது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மோடி ரகசியமாக மேற்கொண்டார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

500, 1,000 ரூபாய்க்கு தடை விதிக்கப்படும் ரகசியம் பாஜ மற்றும் அவர்களது நண்பர்களுக்கு கடந்த வாரமே தெரிந்துள்ளது. இதையடுத்து பாஜவினர் ஏற்கனவே தாங்கள் வைத்திருந்த பணத்தை கொண்டு தங்க நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி குவித்து விட்டனர். கருப்பு பணத்ைத ஒழிக்க முடிவு செய்து உயர் மதிப்பிலான நோட்டுகளை தடை செய்த மோடி, 2000 ரூபாயை வெளியிட்டது ஏன்? விரைவில் சந்திக்க உள்ள உபி, பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு ெகஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY