பாக்.,கில் இரண்டு குண்டுவெடிப்புகள்: 19 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

சீன தூதரகம் அருகே

பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரகம் அருகே குண்டுவெடித்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தினர் திருப்பி சுட்டதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ராணுவத்தினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
காரில் வந்த பயங்கரவாதிகள், போலீசாரை சுட்டு கொன்றுவிட்டு வெடிமருந்துகளுடன் சீன தூதரகத்திற்குள் நுழைய முயன்றனர் இதனால், அச்சமடைந்த தூதரக ஊழியர்கள், பாதுகாப்பான இடத்திற்குள் தஞ்சமடைந்தனர்.

படுகாயம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவின் ஹங்கு என்ற இடத்தில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில், 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்த இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.