பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மகிந்த

பாகிஸ்தான் தேசிய நாளை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும், அவரது அணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 79 ஆவது தேசிய நாளை முன்னிட்டு கொழும்பு கலதாரி விடுதியில் நேற்று மாலை சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது ஆதரவு தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், போன்றவர்களும், நிமால் சிறிபால டி சில்வா, அதுரலியே ரத்தன தேரரும் நிகழ்வில் காணப்பட்டனர்.

எனினும், அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட ஒரு சிலரே இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.