பாகிஸ்தான் சோதனைச்சாவடி மீது தாக்குதலில் 7 படையினர் பலி

150416125007_wana_valley_640x360_getty_nocreditபாகிஸ்தானின் தெற்கு வாஸிரிஸ்தானில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றின் மீது ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குலில், தமது படையினர் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பாகிஸ்தானின் ஏழு பழங்குடி பிரதேசங்களில் தெற்கு வாஸிரிஸ்தானும் ஒன்று, இங்கு உள்ளுர் கிளர்ச்சியாளர்கள், தாலிபான் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகளும் செயல்படுகின்றனர்.

தெற்கு வாஸிரிஸ்தானிலும் கைபர் பகுதியிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடுத்துள்ளது.

LEAVE A REPLY