பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவருக்கு சிறை!

பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவரை பத்து தினங்களுக்கு சிறை வைக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தனது கட்சிக்காக பிரசாரம் செய்யும் வாய்ப்பை அவர் இழந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் லாகூரில் நேற்று கைது செய்யப்பட்டார்.

நவாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த போது முன்னெடுக்கப்பட்ட குறைந்த செலவிலான வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.