பாகிஸ்தான் இடம் கொடுப்பதால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக அந்த நாடு திகழ்கிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவின் புலனாய்வுத் தலைவர் டான்கோட்ஸ் பேசியதாவது:-

இந்தியாவுடன் மோதலை அதிகரித்து வரும் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகவும், உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் பின்னடவை சந்தித்து வருகிறது. அதனுடைய நடவடிக்கைகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது.

பாகிஸ்தான் இடம் கொடுப்பதால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக அந்த நாடு திகழ்கிறது. அங்கிருந்தபடி அவர்கள் இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துகிறார்கள். அமெரிக்காவுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள்.

பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஏனென்றால் பாகிஸ்தான் தற்போது சீனாவுடன் உறவை மேலும் பலப்படுத்தி வருகிறது.

தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் வகையிலும், மற்ற வகையிலான ஒத்துழைப்பு வழங்குவதிலும் அலட்சியமாக செயல்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எதிராக உள்ளன. இவ்வாறு டான்கோட்ஸ் பேசினார்.

LEAVE A REPLY