பாகிஸ்தானுக்கு இதுநாள் வரை நிதியுதவி அளித்தது முட்டாள்தனம்: டொனால்டு டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்களை 2001–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11–ந்தேதி அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து தகர்த்தனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறது. இந்த உதவித் தொகையை பெறும் முக்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். 2002–ம் ஆண்டு முதல் பயங்கரவாத்துக்கு எதிராக பாகிஸ்தான் போராடுவதாக கூறி அமெரிக்க நிதி உதவி வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 33 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) இதுபோல் பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இதுநாள்வரை அளித்து வந்த நிதியுதவியை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்துள்ள டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கு 15 ஆண்டுகளாக நிதியுதவி அளித்தது முட்டாள்தனம், வஞ்சகம் எண்ணம் கொண்ட பாகிஸ்தான் பொய்களை தவிர வேறு எதையும் தந்தது இல்லை. அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக நினைத்து பொய்களை பாகிஸ்தான் அள்ளி வீசியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தேடும் பயங்கரவாதிகள் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்கிறது.” என்று தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY