பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் பலி; 3 பேர் காயம்

பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தான் நகரில் ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டிய இடாக் கிராமத்தில் ராணுவ வாகனம் ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அதன் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், பஜாவர் பழங்குடியின மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று இன்று வெடித்ததில் பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த உள்ளூர் முதியவர் ஒருவரை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதில் காயமடைந்த முதியவர் மாலிக் மரூக் மற்றும் காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தாக்குதலுக்கு உடனடியாக ஒருவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை.

தெஹ்ரீக் இ தலீபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு ஆனது பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு ஆதரவு தரும் உள்ளூர்வாசிகள் ஆகியோர் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது.

LEAVE A REPLY