பாகிஸ்தானில் போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை, 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

201510181602568176_8-militants-killed-in-Pakistan_SECVPF.gif

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் மேங்கோபிர் வடக்கு பைபாஸ் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

ஆனால் அவர்களைப் பார்த்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார்கள். உடனே அதிரடிப்படை போலீசாரும் தங்கள் துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினர் இடையே  அந்த துப்பாக்கிச்சண்டை நீண்ட நேரம் நீடித்தது-. அதன் முடிவில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குலாம் உசேன் என்ற போலீஸ் அதிகாரியும், அன்வர்கான் என்ற போலீஸ்காரரும் காயம் அடைந்தனர். மூத்த போலீஸ் அதிகாரி ராவ் அன்வர், இந்த துப்பாக்கிச்சண்டை குறித்து கராச்சியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘இப்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ள தீவிரவாதிகள், முகரம் பண்டிகையின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்தது’  என கூறினார். முகரம் பண்டிகையையட்டி பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY