பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் பலி: பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம்

29-1451408018-kabul-attack232-5000பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் தாலிபான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெஷாவர் நகரில் உள்ள தேசிய தரவு மையம் மற்றும் பதிவு அலுவலகத்துக்கு இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரை, வாயிலின் அருகே பாதுகாவலர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, அவர் தன்னிடமிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தார். இதையடுத்து அலுவலகத்தின் கதவு, ஜன்னல்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இந்த திடீர் தாக்குதலில், வாயில் அருகே நின்றிருந்த பொதுமக்கள் அலரி அடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். 23 killed in Pakistan suicide attack தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். சுமார் 12 கிலோ அளவுக்கு வெடிப் பொருளை எடுத்து வந்திருக்காலம் என போலீஸார் தெரிவித்தனர். தற்கொலை தாக்குதல் நடத்திய நபர், வாயில் அருகே தடுத்து நிறுத்தப்படவிட்டால் உயிர் சேதம் அதிகமாக இருந்திருக்கும். சம்பவத்தின் போது அந்த அலுவலகத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். இருப்பினும் இச்சம்பவத்தில் 23 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தின் அருகே மனித உடலின் பாகங்கள் சிதறி கிடந்தன. படுகாயமடைந்த பலர் மர்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தெரீக்-ஐ-தாலிபான் என்ற அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. இதே அமைப்பு கடந்த ஆண்டு வாஹா எல்லையில் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY