பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கங்களுடன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும் செயல்பட தொடங்கி உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஐ.எஸ். மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே மோதல் நடைபெறும் சம்பவமும் தொடர்கிறது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதம் தாங்கிய இரு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாதுகாப்பு போஸ்டை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் முதலில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர், அப்போது ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான், இதனையடுத்து மற்றொரு பயங்கரவாதி தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளான். தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தாக்குதலுக்கு பொறுப்பு கூறியுள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியவர்கள் முகமது அல்-குர்சானி மற்றும் ரித்வான் அல்-குர்சானி என தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY