பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானம் – நிமல் சிறிபால டி சில்வா

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட திட்டங்கள் தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றங்கள், மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் இழுத்தடிக்கப்படுவது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போது இருக்கும் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்,

தமது அமைச்சுடன் இணைந்து உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.