பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சியில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.

‘தமிழர் தாயகத்திலிருந்து இலங்கை இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்’, ‘எங்கள் தாயக மண்ணை ஆக்கிரமிப்பதை உடனே நிறுத்து’, ‘எமது அன்புக்குரியவர்கள் எங்கே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் வட. மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், பசுபதிப்பிள்ளை, தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடக பேச்சாளர் அருந்தவபாலன், பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டனர்.