பல்லாவரம் ரவுடி சமந்தா!!

நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், நாக சைதன்யா சமந்தா என்னை மிரட்டிதான் காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்க வைத்தார் என தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யா நடித்துள்ள தெலுங்கு படமான யுத்தம் சரணம் இந்த வாரம் ரிலீஸாகவுள்ளது.

இதனால் படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில், சமந்தா பற்றி பேசினார். அவர் கூறியதாவது, ஏ மாயா சேசாவா படத்தில் இருந்தே நானும் சமந்தாவும் காதலித்து வந்தோம்.

நாளடைவில் வீட்டிற்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்தோம்.
ஒரு கட்டத்தில் காதலை எங்கள் வீட்டில் கூறி சம்மதம் வாங்க சொல்லி கூறினார். ஆனால், இதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பின்னர், சமந்தா உங்கள் வீட்டில் கூரி சம்மதம் வாங்குகிறாயா இல்லை ராக்கி கட்டி உன்னை அண்ணாக்கிவிடவா என மிரட்டினார்.
பின்னரே, நான் எங்கள் வீட்டில் சமந்தாவுடனான காதலை பற்றி கூறினேன் என தெரிவித்தார்.

இப்பொழுது இரு வீட்டாரின் சம்மத்துடன் எங்கள் காதல், திருமணம் வரை வந்துள்ளது என கூறினார்.

LEAVE A REPLY