பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் நடைபெற்று வெளியாகிய, கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் அடங்கிய 2017/2018 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில், பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும். இதில் உள்ளடக்கப்பட்டுள்ள கையேட்டில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக, இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

2017ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் 1 இலட்சத்து 63ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெற்றுக்கொண்டுள்ள போதிலும், பல்கலைக்கழகங்களுக்கு 30ஆயிரத்து 500 மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY