பரியேறும் பெருமாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்ப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக உருவாகி ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் டீசரை ஜூன் 4 (நாளை) வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்ற ‘கருப்பி…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், டீசரை மிகவும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY