பரபரப்பான நடிகையாக வலம் வரும் நயன்தாரா

201612261352480361_actress-nayanthara-13th-year-screen-trip_secvpf-gifஜெயராம் நடித்த ‘மனசினக்கரே’ மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி வெளியானது. இப்போது அவர் திரை உலகில் 13-வது ஆண்டில் காலடி பதித்திருக்கிறார். ஆண்டுகள் ஓடினாலும் அவருக்குள்ள நாயகி அந்தஸ்து இன்று வரை குறையவில்லை.

தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை, இவர் படத்தில் நடித்தாலே அதற்கு தனி மவுசு என்று பல பரிமாணங்களை பெற்றிருக்கிறார்.

ஹரி இயக்கத்தில் சரத்குமார் ஜோடியாக ‘அய்யா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நயன்தாரா, அடுத்து ரஜினி ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார்.

முதலில் சிம்பு, அடுத்து பிரபுதேவா என்று காதலில் விழுந்தார். இதனால் சினிமாவில் இருந்து சிறிது விலகினார். என்றாலும் காதலை கடந்து மீண்டும் சினிமாவில் தீவிரம் காட்டினார். இவரது காதலும் தனிப்பட்ட வாழ்க்கையும் திரையுலக பயணத்தில் எந்த வித தடையையும் ஏற்படுத்தவில்லை.

சினிமாவில் நயன்தாராவின் இரண்டாவது பயணம் மிகவும் வேகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

இதனால் நயன்தாராவின் மார்க்கெட்டும், சம்பளமும் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. நாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறார். அது போன்ற படங்களே இவருக்கு அமைந்து வருகின்றன.

காதலில் விழுந்த பல நடிகைகளின் திரையுலக பயணம் அத்துடன் முடிவடைந்திருக்கிறது. ஆனால் நயன்தாரா தடைகளை தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். இப்போது இயக்குனர் விக்னேஷ்சிவனை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. என்றாலும் நயன்தாராவுக்கு இதனால் சினிமா உலகில் எந்த பாதிப்பும் இல்லை. அவரது திரைப்பயணம் இனிதாகவே தொடர்கிறது.

LEAVE A REPLY