பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார்.

கடந்த டிசெம்பர் 20ஆம் நாள் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை முதல்முறையாக இன்று கூடவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காவல்துறை, அரச அச்சகம்,உள்ளிட்ட 43 அரச நிறுவனங்களைத் தன்வசப்படுத்தியுள்ள நிலையிலும், ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் நியமனத்தை உறுதி செய்வதற்கான குழுவொன்றை தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையில் நியமித்துள்ள நிலையிலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.