பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு மகிந்த அணி கடும் எதிர்ப்பு!

G.L Peiris-200-news-3காணாமல்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகமவின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் தொடர்பில் விசாரணை நடத்தும் நீதிமன்ற செயன்முறையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பினை ஏற்றக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கியோ அல்லது உள்ளடக்காமலோ விசேட நீதிமன்றம் அமைப்பதனை எதிர்ப்பதாவும், ஜெனீவா தீர்மானங்கள் அமுல்படுத்தப்படுவதனை இநிதியாவும் மேற்குலக நாடுகளும் கண்காணிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY